Saturday, August 27, 2011
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகிய 3 பேருக்கு வருகிற 9-ந்தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருக்கிறது. 3 பேரின் கருணை மனுவை ஜனாதிபதி பிரதீபாபட்டில் நிராகரித்து விட்டார். அவரது உத்தரவு வேலூர் சிறையில் இருக்கும் மூவருக்கும் நேற்று பிற்பகலில் நேரில் வழங்கப்பட்டது.
இதையடுத்து அவர்கள் வருகிற 9-ந்தேதி அதிகாலை தூக்கிலிடப்படுவார்கள் என்று வேலூர் ஜெயில் சூப்பிரண்டு அறிவுடைநம்பி கூறியுள்ளார். தூக்கு தண்டனையில் இருந்து 3 பேரையும் காப்பாற்ற தமிழக அரசியல் கட்சி தலைவர்களும், பல்வேறு அமைப்புகளும் இறுதிக்கட்ட முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதில் மத்திய-மாநில அரசுகள் முயற்சி எடுக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறினார். தூக்கு தண்டனை கூடாது என்பது எனது கருத்து. குற்றம் சாட்டப்பட்ட 3 பேரும் 20 ஆண்டுகள் சிறையில் இருந்து விட்டதால் மனிதாபிமான அடிப்படையில் இரக்க சிந்தனையோடு அவர்களை காப்பாற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கடந்த சில நாட்களாகவே மூவரையும் தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று பல்வேறு வகையில் மத்திய-மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்து வருகிறார். நேற்று காஞ்சீபுரத்தில் இதற்காக நடந்த மனித சங்கிலி போராட்டத்தில் வைகோ கலந்து கொண்டார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், நாம்தமிழர் கட்சி தலைவர் டைரக்டர் சீமான் ஆகியோரும் அறிக்கை வாயிலாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
சென்னையை அடுத்த மறைமலைநகரில் நாளை நடைபெறும் தூக்கு தண்டனை ஒழிப்பு மாநாட்டில் ராமதாசும், திருமாவளவனும் பங்கேற்கிறார்கள். திராவிட கழக தலைவர் கி.வீரமணி, பெரியார் திராவிட கழக தலைவர் கொளத்தூர் மணி, புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மற்றும் கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக நிறுவனர் குணங்குடி அனிபா ஆகியோரும் ராஜீவ் கொலையாளிகளை தூக்கிலிட எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் 3 பேரையும் தூக்கிலிடுவதற்கு எதிர்ப்பு வலுக்கிறது. தமிழ் நாட்டின் பல்வேறு இடங்களில் சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். சென்னையில் சட்டக் கல்லூரி மாணவர்கள் ரெயில் மறியலில் ஈடுபட்டனர். 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் பெண் வக்கீல்கள் அங்கயற்கண்ணி, வடி வாம்பாள், சுஜாதா ஆகிய 3 பேரும் நேற்று முதல் கால வரையற்ற உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.
திருப்பூரில் பா.ம.க., ம.தி. மு.க. சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. வருகிற 29-ந்தேதி கோவையில் ரெயில் நிறுத்த போராட்டம் நடைபெறும் என்று பெரியார் திராவிட கழகம் அறிவித்துள்ளது. கோவையில் சட்டக் கல்லூரி மாணவர்கள் கலெக்டரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். போலீசார் மாணவர்களை கைது செய்து கலெக்டரை மீட்டனர்.
இதற்கிடையே 3 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை உத்தரவை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வருகிற 29-ந் தேதி அப்பீல் செய்யப்படுகிறது. பிரபல வக்கீல் ராம்ஜெத்மலானி அப்பீல் மனுவை தாக்கல் செய்து வாதாடுகிறார். இவர் ஏற்கனவே இந்திரா காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக வாதாடி பரபரப்பு ஏற்படுத்தியவர்.
பல்வேறு முக்கிய வழக்குகளில் ஆஜராகி இருக்கிறார். 29-ந்தேதி ராம்ஜெத் மலானி கோர்ட்டுக்கு வந்து வாதாடும்போது தமிழ் இன உணர்வாளர்கள் அனைவரும் கோர்ட்டு முன்பு ஒன்று கூடுவோம் என்று டைரக்டர் பாரதிராஜா அறி வித்துள்ளார். அதன் பிறகு மாணவர்களை திரட்டி போராடுவேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
29-ந்தேதி அப்பீல் செய்யப்படும் நிலையில் 3 பேரை தூக்கிலிடுவதற்கான நாளும் நெருங்கிக் கொண்டு இருக்கிறது. தூக்கிலிடுவதற்கான ஏற்பாடுகளை வேலூர் ஜெயில் அதிகாரிகள் தொடங்கி விட்டனர். 3 பேரையும் மற்ற கைதிகளுடன் சேராமல் பிரித்து வைத்துள்ளனர். அவர்களுடன் கூடவே ஜெயில் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். 29-ந்தேதி கோர்ட்டு உத்தரவு எப்படி இருக்கும்? 3 பேரும் காப்பாற்றப்படுவார்களா? என்ற பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.

No comments:
Post a Comment