Saturday, August 27, 2011

வரவு செலவு திட்டம் தயாரிப்பது தொடர்பில் கலந்துரையாடல்!

Saturday, August 27, 2011
அடுத்த வருடத்தின் வரவு செலவு திட்டத்தை தயாரிப்பதற்கான ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஜனாதிபதி தலைமையில் மற்றுமொரு கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.

நாட்டின் பல்வேறு துறைகளை சார்ந்த 42 நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் சிலர் இதில் கலந்து கொண்டிருந்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது.

அத்துடன் பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள், கலாநிதிகள், வைத்தியர்கள், பொறியியலாளர்கள் மற்றும் கணக்காய்வாளர்கள் உள்ளிட்ட சிலரும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றியிருந்ததாக ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பதாக தமது ஆலேசனை பெற்றுக்கொண்டமை தொடர்பில் இவர்கள் இதன்போது ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

சிறந்த வரவு செலவுத் திட்டம் தயாரிக்க தாம் பூரண ஒத்துழைப்பு வழங்குவதாகவும் ஜனாதிபதியிடம் இவர்கள் கூறியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment