Tuesday, August 23, 2011
கிண்ணியாவில் விசேட இராணுவ முகாம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது.
இராணுவத்தின் 224ம் படையணி உருவாக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதேசத்தின் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் நோக்கில் விசேட படையணி உருவாக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
அண்மையில் கிண்ணியா பிரதேசத்தில் கிறிஸ் பேய் சர்ச்சையினால் மக்களுக்கும் பாதுகாப்புத் தரப்பினருக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.
பதற்ற நிலை நிலவிய காலப்பகுதியில் இரண்டு படையணிகள் குறித்த பிரதேசத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிஹால் ஹப்புவாரச்சி தெரிவித்துள்ளார்.
பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு இராணுவத்தினரின் பிரசன்னம் அவசியமானது எனவும், இன்னமும் பிரதேசத்தில் வதந்திகள் பரவி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிண்ணியா பிரதேசத்தில் சுமார் 1000 முதல் 1200 வரையிலான படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment