Tuesday, August 23, 2011

இந்திய சர்வதேச செய்தி நிரூபர் ரகூபீர் கோயால் வெளியிட்ட கருத்தினை:அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரிய மறுத்துள்ளார்!

Tuesday, August 23, 2011
இலட்சக் கணக்கான தமிழர்களுக்கு எதிராக அட்டூழியங்கள் நிகழ்த்தப்படுவதாக அமெரிக்க இராஜாங்க திணைக்கள செய்தி மாநாட்டின் போது இந்திய சர்வதேச செய்தி நிரூபர் ரகூபீர் கோயால் வெளியிட்ட கருத்தினை அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரிய மறுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் குறித்த ஊடகவியலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறித்த கருத்து முற்றிலும் தவறு என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஊடகவியலாளருக்கு எழுதிய கடிதத்தில் :-

புலிகளுக்கு எதிராகவே யுத்தம் மேற்கொள்ளப்பட்டதே தவிர தமிழ் மக்களுக்கு எதிராக அல்ல. புலிகள் எப்.பி.ஐயின் கூற்றின்படி உலகின் மிக கொடூரமான பயங்கரவாத அமைப்பாக கருதப்பட்டதுடன் அமெரிக்கா மற்றும் சில நாடுகளில் தடைசெய்யப்பட்ட அமைப்பாக அறிவிக்கப்பட்டது.

அதேபோன்று தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம் பொதுமக்கள், தமிழரான இலங்கை முன்னாள் வெளிவிவகார அமைச்சர், இலங்கை முன்னாள் ஜனாதிபதி மற்றும் இந்திய முன்னாள் பிரதமர் என பலரை புலியினர் படுகொலை செய்துள்ளனர்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு யுத்தத்தின் போது மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் தவறுகள் தொடர்பில் அனைத்து துறையினரையும் விசாரணை செய்தது.

இந்நிலையில் ஊடகவியலாளரான தாங்கள் ஜனாதிபதி தலைமையிலான இலங்கை அரசு தமிழருக்கு எதிராக அட்டூழியம் செய்வதாக கூறிய கருத்து முற்றிலும் தவறு என நான் உறுதிப்படுத்துகிறேன்.

அத்தோடு இலங்கை விஜயத்தை மேற்கொண்டு என்னுடன் கலந்துரையாடி உண்மை நிலை குறித்து அறிய முன்வரவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment