Tuesday, August 23, 2011

புதுடில்லியில் நடைபெறும் இலங்கை இனப்பிரச்சினை தொடர்பில் ஆராயும் கருத்தரங்கில் தமிழ் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் நேற்று முன்தினம் பயணமாகியுள்ளனர்!

Tuesday, August 23, 2011
இந்திய காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பனின் ஏற்பாட்டில் புதுடில்லியில் நடைபெறும் இலங்கை இனப்பிரச்சினை தொடர்பில் ஆராயும் கருத்தரங்கில் பங்கு பற்றுவதற்காக வடக்கு கிழக்கைச் சேர்ந்த தமிழ் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பயணமாகியுள்ளனர்.

மனித உரிமைகள் மற்றும் உலக அபிவிருத்திக்கான பாராளுமன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த கருத்தரங்கில் வடக்கு கிழக்கைச் சேர்ந்த தமிழ் அரசியல் கட்சிகளின் சார்பில் பிரதிநிதிகள் பங்கு பற்றுகின்றனர்.

தமிழரசுக் கட்சி சார்பில் எம்.பி.க்களான மாவை சேனாதிராஜா, எம்.சுமந்திரன்,

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் சார்பில் அதன் தலைவரும் கிழக்கு மாகாண சபை முதலமைச்சருமான சி.சந்திரகாந்தன்,

ஈ.பி.ஆர்.எல். எப். பத்மநாபா அணியின் சார்பில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரெத்தினம், எஸ். சிறிதரன் ஆகியோரும்,

சுரேஸ் அணியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன்,

ரெலோவின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், ஹென்றி மகேந்திரன்,

புளொட் அமைப்பின் சார்பில் வன்னி மாவட்டப் பொறுப்பாளர் கந்தையா சிவநேசன், மட்டக்களப்பு மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் பெனடிக் தகபாலசிங்கம்,

தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் அதன் தலைவர் ஆனந்தசங்கரி,

ஸ்ரீ ரெலோவின் சார்பில் சுரேஷ் உள்ளிட்டோரும் இந்தியா பயணமாகியுள்ளனர்.

இன்றும் நாளையும் புதுடில்லியில் நடைபெறவுள்ள இக் கருத்தரங்கில் வடக்கு கிழக்கு சம்பந்தமான அரசியல் விடயங்கள் பற்றி ஆராயப்படுவதுடன் முன்வைக்கப்படவுள்ள தீர்வுத் திட்டம் பற்றியும் ஆராயப்படும் என தெரியவருகிறது.

No comments:

Post a Comment