Sunday, August 28, 2011

ஐ நா வின் மனித உரிமைகள் கூட்டத்தொடருக்கு ஐவரின் பெயர் வெளியீடு!

Sunday, August 28, 2011
சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெறுகின்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அடுத்த கூட்டத் தொடரில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐந்து பேர் கொண்ட குழு பெயரிடப்பட்டுள்ளது.

நான்கு அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் இந்தக் குழுவில் அடங்குவதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிடுகின்றது.

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல.பீரிஸ், மஹிந்த சமரசிங்க, நிமல் சிறிபாலடி சில்வா, அனுர பிரியர்தஷன யாப்பா, ஆகிய அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தனவும் இந்த பிரதிநிதிகள் குழுவில் அடங்குகின்றனர்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 18 வது கூட்டத் தொடர் செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

No comments:

Post a Comment