Sunday, August 28, 2011

முச்சக்கரவண்டி எரியூட்டப்பட்ட சந்தேகத்தில் பிக்கு ஒருவர் கைது!

Sunday, August 28, 2011
காலி - அக்மீமன - லபுதுவ பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

லபுதுவ் பிரதேசத்திலுள்ள விஹாரை ஒன்றிற்கு அருகிலுள்ள வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றை பிக்கு ஒருவர் தீ வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் நேற்று நள்ளிரவுி இடம்பெற்றுள்ளதாதக பொலிஸார் குறிப்பிட்டனர்.

தீ வைக்கப்பட்டுள்ள முச்சக்கரவண்டிக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முச்சகரவண்டிக்கு அருகிலிருந்து சந்தேகநபரான பிக்குவின் கையடக்கத் தொலைபேசியை மீட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்

No comments:

Post a Comment