Sunday, August 28, 2011

7-ந் தேதி இலங்கை பிரச்சினைக்கு தீர்வு காண டெல்லியில் போராட்டம்; மார்க்.கம்யூனிஸ்டு பொதுசெயலாளர் பிரகாஷ்காரத் தகவல்!

Sunday, August 28, 2011
திருவண்ணாமலையில் மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட குழு அலுவலகம் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் அகில இந்திய பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கலந்துகொண்டு அலுவலகத்தை திறந்துவைத்து பேசினார். பின்னர் திருவண்ணாமலை காந்தி சிலை முன்பு நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிரகாஷ் காரத் பேசியதாவது:-

நாடு முழுவதும் மக்கள் ஊழலுக்கு எதிராக ஒன்று திரண்டுள்ளனர். நாட்டில் உள்ள ஊழலை ஒழிக்க பொதுமக்கள் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர். பாராளுமன்றத்திலும் வலுவான லோக்பால் மசோதா கேட்டு கோரிக்கை வைக்கிறார்கள். அரசு கொண்டு வந்த மசோதாவில் வலு இல்லை. அதனுடன் ஜன்லோக்பாலில் உள்ள அம்சங்களையும் சேர்த்து வலுவானதாக ஆக்க மத்திய அரசு ஒத்துக்கொண்டுள்ளது.

பிரதமரையும் வரம்புக்குள் கொண்டுவரவும் அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். பெட்ரோல் விலை கட்டுப்பாட்டு உரிமையை தனியாருக்கு விட்டுக்கொடுத்ததன் விளைவாக, 13 முறை பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. தற்போது உரங்களின் விலை நிர்ணய உரிமையையும், தனியாருக்கு தாரைவார்க்க அரசு முன்வந்துள்ளது.

சில்லறை வியாபாரத்தில் பன்னாட்டு நிறுவனங்களை நுழைக்க அரசு முனைப்புடன் செயல்படுகிறது. இதனால் சிறு வியாபாரிகள், தொழிலாளர்கள் வேலையிழக்கும் நிலை உருவாகும். அவர்களின் வாழ் வாதாரமும் பாதிக்கப்படும். இதனை தடுக்கும் வகையில் அனைத்து தொழிற் சங்கங்களும் போராட்டம் நடத்த வேண்டும்.

இலங்கையில் போரைக் காரணம் காட்டி ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். அப்பொழுது போரை நிறுத்தக் கோரி இந்திய அரசை வலியிறுத்தினோம். ஆனால் அவர்களோ புலிகளை ஒழிக்கத்தான், இந்தப் போர் என்றார்கள். தற்போது இலங்கை மண்ணில் புலிகள் அழிக்கப்பட்டுவிட்டார்கள். ஆனால் தமிழ் மக்கள் இன்னும் அடிமையாகவே வாழ்கிறார்கள். அவர்களுக்கான அரசியல் உரிமை. சுதந்திரம் போன்றவை மறுக்கப்பட்டுள்ளது. அம்மக்கள் சுதந்திருத்துடனும், தன்மானத்துடனும் வாழ வேண்டும் என்றால் சுயாட்சி அதிகாரிம் கொண்ட மாநிலம் அமைத்து தருவதே தீர்வுக்கு வழி வகுக்கும் என்றார்.

இலங்கையில் 2009-ம் ஆண்டு புலிகள் முற்றிலும் அழிக்கப்பட்ட பிறகும், தமிழர்கள் . அப்போது முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டவர்களுக்கு, அரசியல் ரீதியாக தீர்வு காணப்படும் என்று இலங்கை அரசு வாக்குறுதி அளித்தது. ஆனால் அதனை நிறைவேற்றாமல் மீறிவிட்டனர். தற்போதும் பலர் அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை இலங்கை அரசு மறு குடியேற்றம் செய்ய வில்லை. போர் குற்றம் விசாரணை, மேல் குடியேற்றம், அரசியல் தீர்வு ஆகிய 3 பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வலியுறுத்தி வருகிற 7-ந் தேதி டெல்லியில் போராட்டம் நடத்தப்பட உள்ளது.

No comments:

Post a Comment