Sunday, August 28, 2011

உள்நாட்டு ரீதியான தீர்வுத் திட்டமொன்றே அமுல்படுத்தப்பட வேண்டும்-பிரசாத் காரியவசம்:-பெங்களுரில் இலங்கை காரியாலயம்!

Sunday, August 28, 2011
உள்நாட்டு ரீதியான தீர்வுத் திட்டமொன்றே நாட்டில் அமுல்படுத்தப்பட வேண்டுமென இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார்.

உலகின் ஏனைய அனைவரை விடவும் இலங்கை மக்களின் தேவைகளை அரசாங்கம் அறிந்து வைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பங்களுரில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை விவகாரத்தில் சர்வதேச சமூகம் தலையீடு செய்வதற்கு உசிதமான காலம் இதுவல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டு வரும் அநேகமான குற்றச்சாட்டுக்கள் தொலைக்காட்சி விவரணங்களாகவும் அறிக்கைகளாகவுமே அமைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், இவற்றை சரியான முறையில் உறுதிப்படுத்த முடியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மக்களின் நல்வாழ்விற்காக பெரும்பான்மையான புலம்பெயர் மக்கள் உதவிகளை வழங்கி வருவதாகவும், மேற்குலக நாடுகளிலும், தமிழகத்திலும் வாழும் ஒரு சில புலம்பெயர் தமிழர்கள் ஒத்துழைப்பு வழங்குவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தின் பின்னரான நிலைமைகளை பயன்படுத்தி மக்களுக்கு சுபீட்சமான எதிர்காலத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

எதிர்வரும் நவம்பர் மாதமளவில் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

பெங்களுரில் இலங்கை காரியாலயம்-இந்தியாவுக்கான இலங்கை தூதுவர் பிரசாத் காரியவசம்!
இலங்கைக்கான பிரதி உயர்ஸ்தானிகர் ஆலயம் ஒன்று பெங்களுரில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான இலங்கை தூதுவர் பிரசாத் காரியவசம் இந்த பிரதி உயர்ஸ்தானிகள் ஆலயத்தை திறந்து வைத்துள்ளார்.

இந்த பிரதி உயர்ஸ்தானிகள் ஆலயத்தின் மூலம் இலங்கை - இந்திய நாடுகளுக்கு இடையிலான உறவு மேலும் பலப்படும் என அவர் அந்த நிகழ்வின் போது அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

இதுதவிர வர்தக நடவடிக்கைகளும் பரஸ்பரம் மேம்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment