Sunday, August 28, 2011

அவசரகால சட்டம் நீக்கப்பட்டமையை அடுத்து பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் விடுவிப்பதில் சிக்கல்-சுசில் பிரேம்ஜயந்த!

Sunday, August 28, 2011
அவசரகால சட்டம் நீக்கப்பட்டமையை அடுத்து, அவசரகால சட்டம் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அல்லது சரணடைந்தவர்கள் விடுதலை செய்யப்படமாட்டார்கள் என அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.பயங்கரவாத தடைச்சட்டம். பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்கும் அதிகாரத்தை கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

சந்தேகநபர்கள்,புலிகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளமையால் அவர்களை சாதாரண சட்டத்தின் கீழ் விடுவிக்க முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள், அந்த சட்டம் அகற்றப்பட்டுள்ளமையால், தற்போது சாதாரண சட்டத்தின்கீழ் கொண்டு வரப்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளன.

இதற்காக அரசாங்கம் புதிய சட்டம் ஒன்றை விரைவில் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தும் என்று நீதியமைச்சின் செயலாளர் சுகத்த கம்லத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment