Wednesday, August 24, 2011
மியன்மார் கடற்பரப்பில் நிர்கதிக்குள்ளாகியிருந்த ஆறு இலங்கை மீனவர்கள் அந்தநாட்டு கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பேருவளை பகுதியில் இருந்து கடற்தொழிலுக்காக சென்றிருந்தவர்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் பயணித்த படகு செயலிழந்ததன் காரணமாகவே சில நாட்கள் அவர்கள் கடலில் நிர்கதிக்குள்ளாகியுருந்ததாக அந்த நாட்டுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
தற்போது மீட்கப்பட்ட குறித்த மீனவர்கள் தற்காலிக முகாமொன்றில் தங்கியுள்ளதாக மியன்மாருக்கான இலங்கைத் தூதுவர் எச்.ஆர்.பியசிறி தெரிவித்தார்.
இந்த மீனவர்கள் எவ்வித பிரச்சினைகளும் இன்றி விரைவில் விடுவிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்
No comments:
Post a Comment