Wednesday, August 24, 2011
மாநிலங்களவையில் இலங்கை தமிழர் பிரச்சனை பற்றி விவாதிக்க பாஜகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் எதிர்ப்பு தெரிவித்ததை கண்டித்து திமுக, அதிமுக, லோக் ஜனசக்தி, பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
மாநிலங்களவையில் இலங்கை தமிழர் பிரச்சனை பற்றி விவாதிக்க வேண்டும் என திமுக உறுப்பினர் திருச்சி சிவா கோரிக்கை விடுத்தார். இதற்கு அதிருப்தி தெரிவித்த பாஜக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் அன்னா ஹசாரே விவகாரம் பற்றித் தான் விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர்.
இதனை கண்டித்து திமுக, அதிமுக, லோக் ஜனசக்தி, பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர்கள் குரல் எழுப்பிதால் அவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இதனையடுத்து மாநிலங்களவை 15 நிமிடம் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை கூடியதும் பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தினர்.
இதனை கண்டித்து திமுக, அதிமுக, லோக் ஜனசக்தி, பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
No comments:
Post a Comment