Wednesday, August 24, 2011

பொலிஸார் சுற்றி வளைத்த போது சந்தேகநபர் தற்கொலை!

Wednesday, August 24, 2011
பிட்டிகல கொடமுன பகுதியில் வீடொன்றில் மறைந்திருந்த குற்றவாளி ஒருவரை கைது செய்வதற்கு முயற்சித்த வேளையில் அவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சந்தேகநபரை கைது செய்வதற்காக அவர் தங்கியிருந்த வீட்டினை சுற்றி வளைக்கும் போது அவர் தற்கொலை செய்ததாக அல்பிட்டி பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குறித்த நபர் வீட்டின் கூரையில் ஏரி அவரிடம் இருந்த துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டதாக பொலிஸாரிடம் குறிப்பிட்டனர்.

சம்பவத்தில் உயிரிழந்த நபர் கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் இடம்பெற்ற பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்வதகாக குற்றப்புவனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவொன்று பிட்டில் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment