Thursday, August 25, 2011

மக்களின் பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்தும்-ப்ராமசிரி பாலசந்திர குருக்கள்!

Thursday, August 25, 2011
மக்களுக்கத் தேவையான பதுகாப்பை அரசாங்கம் வழங்கி வருவதால் கீறீஸ் பூதங்கள் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று சர்வதேச இந்து மத சம்மேளனத்தின் உதவிச் செயலாளர் ப்ராமசிரி பாலசந்திர குருக்கள் தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று காலை நடைபெற்ற விஷேட ஊடகவியலாளர்கள் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு வேண்டிக்கொண்டார்.

அண்மைக்காலமாக நாட்டு மக்கள் மத்தியில் பேச்சுக்கு இடமாகியூள்ள கிறீஸ் மனிதன் அல்லது மர்ம மனிதன் என்ற விடயம் குறித்து விளக்கமளிக்கும் நோக்கில் இந்த ஊடகவியலாளர் சந்திப்புக்கு எற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நாட்டில் இனமத பேதமின்றி சமாதானமாக ஒத்துழைப்புடன் வாழுகின்ற சூழல் நிலவுகின்ற வேளையில் கீறீஸ் பூதங்கள் குறித்து பதற்ற நிலையை உருவாக்க சில சக்திகள் முயற்சிக்கின்றன.

நாட்டை ஆசியாவின் ஆச்சரியமாக முன்னெடுத்துச் செல்லும் நடவடிக்கையை ஜனாதபதி மேற்கொண்டு வருவதை விரும்பாத சக்திகள் இவ்வாறான நிலையை தோற்றுறவிக்க முயற்சிக்கின்றன.

இதற்கு அரசாங்கம் விரைவில் ஒரு முற்றுப்புள்ளியை வைக்கும் என்ற நம்பிக்கை இருக்கின்றது. எனவே மக்கள் பதற்றமடையாமல் அமைதியாக செயற்பட வெண்டும் என குருக்கள் மேலும் வேண்டுகோள் விடுத்தார்.

No comments:

Post a Comment