Thursday, August 25, 2011

அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் குடியேற்றம்!

Thursday, August 25, 2011
யாழ்ப்பாணம், அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட 36 ஆயிரம் குடும்பங்களை, மீள குடியேற்றப்பட்டுள்ளதாக அரசாங்கம் உயர் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாண அரசாங்க அதிபர் இமேல்டா சுகுமார் இதனை தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட விவசாயிகள் குழுவினால் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தௌ;ளிப்பளையில் தங்களை மீளகுடியேற்ற அனுமதிக்க, அரசாங்கத்தை பணிக்குமாறு கோரி அவர்கள் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த நிலையில், தற்போது 35 ஆயிரத்து 968 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 199 பேர் அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அவர்களில் பெரும்பாலானவர்குள் தௌளிப்பளையைச் சேர்ந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment