Monday, August 22, 2011
சென்னை: வலிமையான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்து வரும் அன்னா ஹசாரேக்கு ஆதரவாக தமிழ்த் திரையுலகினர் சென்னையில் நாளை உண்ணாவிரத போராட்டம் நடத்துகின்றனர். இதில் நடிகர், நடிகைகள் உள்பட பலர் பங்கேற்கின்றனர்.
நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த லோக்பால் மசோதாவை திரும்ப பெற்றுவிட்டு, வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, டெல்லி ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவருடன் ஏராளமானோர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். நாடு முழுவதும் நாளுக்கு நாள் அவருக்கு ஆதரவு பெருகி வருகிறது. ஆயிரக்கணக்கானோர் ராம்லீலா மைதானத்தில் திரண்டுள்ளனர். ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு அமைப்பினரும் பொதுமக்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
தமிழகத்திலும் பல இடங்களில் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் போன்ற போராட்டங்களில் சமூக ஆர்வலர்களும் பல்வேறு அமைப்பினரும் ஈடுபட்டுள்ளனர். விழிப்புணர்வு பிரசாரமும் செய்து வருகின்றனர். சென்னை திருவான்மியூரில் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தினர் கடந்த ஒரு வாரமாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், அன்னா ஹசாரே போராட்டத்துக்கு தமிழ் திரையுலகமும் ஆதரவு தெரிவித்துள்ளது. தங்களது ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் தமிழ்த் திரையுலகினர் நாளை ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து சென்னையில் ஆனந்தா எல்.சுரேஷ், சித்ரா லட்சுமணன், கேயார் (பிலிம் சேம்பர்), கே.முரளிதரன், அன்பாலயா பிரபாகரன் (தயாரிப்பாளர்கள் சங்கம்), ராதாரவி (நடிகர் சங்கம்), சிவா (பெப்சி), அபிராமி ராமநாதன், பன்னீர் செல்வம் (திரை அரங்கு உரிமையாளர்கள்), கலைப்புலி ஜி.சேகரன் (வினியோகஸ்தர் சங்கம்) ஆகியோர் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.
அவர்கள் கூறியதாவது:
நாட்டின் முக்கிய பிரச்னைக்காக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, டெல்லியில் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். அவருக்கு தமிழ்த் திரையுலகம் ஆதரவு தெரிவிக்கிறது. எங்கள் ஆதரவை வெளிப்படுத்தும் வகையில், நாளை ஒருநாள் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளோம். சென்னை அண்ணா சாலையில் உள்ள பிலிம்சேம்பர் வளாகத்தில் நாளை காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. இதில் நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், திரை அரங்கு உரிமையாளர்கள், வினியோகஸ்தர்கள், திரைப்பட தொழிலாளர்கள் கலந்துகொள்கின்றனர். உண்ணாவிரத போராட்டம் நடந்தாலும் ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஷூட்டிங்குகள் தடையின்றி நடக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அன்னா ஹசாரே 5 கிலோ எடை குறைந்தார்: சிறுநீரகம், கல்லீரல் பாதிக்கும் அபாயம்!
ஊழலுக்கு எதிராக டெல்லி ராம்லீலா மைதானத்தில் அன்னா ஹசாரே மேற்கொண்டுள்ள உண்ணாவிரதம் இன்று 7-வது நாளாக எட்டியது. திகார் ஜெயிலில் இருந்து வெளியே வந்த போது நன்கு உற்சாகமாக இருந்த அவர் தற்போது சற்று சோர்வுடன் காணப்படுகிறார்.
அன்னா ஹசாரேயை அரசு டாக்டர்கள் குழு ஒன்று தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகிறது. அவரது உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை டாக்டர்கள் குழு தினமும் ஆய்வு செய்கிறது. இன்று காலையிலும் அவரை டாக்டர்கள் பரிசோதித்தனர்.
அப்போது அவரது ரத்த அழுத்தம் 130/80 ஆகவும் இதயத்துடிப்பு 90 ஆகவும் இருப்பது தெரிந்தது. ஆனால் உடல் எடை 5 கிலோ குறைந்து விட்டது. 72 கிலோ எடையுடன் இருந்த அவர் தற்போது 67 கிலோ தான் உள்ளார்.
அன்னா ஹசாரே உடல் நிலை நல்ல திருப்தியாக இருப்பதாக இன்று காலை டாக்டர்கள் அறிவித்தனர். ஆனால் போராட்ட குழுவினருக்கு ஹசாரே உடல்நிலை பற்றி கவலை ஏற்பட்டுள்ளது. அவரது ரத்தத்திலும், சிறுநீரிலும் உள்ள “கேடோன்” அளவு குறைந்துள்ளது. இது மெல்ல, மெல்ல ஹசாரேயின் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயல்பாட்டை பாதிக்கும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.
இதே நிலை நீடித்தால் கோமா நிலை ஏற்பட்டு விடும் என்று போராட்ட குழுவினர் பயப்படுகிறார்கள். உடலில் மேலும் சோர்வு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அன்னா ஹசாரே தினமும் காலை செய்யும் யோகா பயிற்சிகளை நிறுத்தி விட்டார்.
இன்று அவர் மேடையில் பெரும்பாலான நேரம் படுத்தே கிடந்தார். இதுபற்றி, கிரண்பேடி கூறுகையில், காந்தியவாதி அன்னா ஹசாரே 7 நாட்களாக சாப்பிடாமல் உள்ளார், அரசு இது பற்றி கவலையேப் படவில்லை என்றார்.

No comments:
Post a Comment