Monday, August 22, 2011

மாநகர சபையின் தலைவர் பதவிக்காக பிரேரிப்பதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது!

Monday, August 22, 2011
முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட கொழும்பு மாநகர சபையின் தலைவர் பதவிக்காக பிரேரிப்பதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

அவர் கொழும்பு நகரசபைத் தேர்தலில் போட்டியிடும் ஆளும் தரப்பு குழுவின் தலைவராக செயற்படுவார் என கட்சியின் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

தற்போது கட்சியின் வேட்பு மனு கையொப்பமிடும் நடவடிக்கைகள் இறுதிகட்டத்தை அடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எனினும், ஏனைய நகர சபைகளுக்கான தலைவர் பதவிகள் குறித்த வேட்பாளர்களை பிரேரிக்கவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

முன்னாள் மாநகரசபைத் தலைவரும், விசேட ஆணையாளராக செயற்பட்டவருமான ஒமார் காமில், மற்றும் முன்னாள் பிரதி நகரசபைத் தலைவர் அசாதி சாலி ஆகியோரும் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு மாநகரசபை உள்ளிட்ட 23 உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்களுக்காக ஐக்கிய தேசிய கட்சியின் வேட்புமனுக்களுக்கு உத்தியோகபூர்வ அனுமதி வழங்கும் பணிகள் இன்றும் நாளையும் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment