Monday, August 29, 2011

ஜி.எல்.பீரிஸ் இன்று தென்கொரியா விஜயம்!

Monday, August 29, 2011
வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தென்கொரியாவிற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்கொரிய வெளிவிவகாரத்துறை அமைச்சரின் அழைப்பிற்கிணங்க அமைச்சர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சின் தொடர்பாடல் பிரிவின் பிரதானி சரத் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த விஜயத்தின் போது இலங்கை வெளிவிவகார துறை அமைச்சர் பல ராஜதந்திர மட்டத்திலான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, இலங்கையின் பல அபிவிருத்தி பணிகளுக்கு நிதியுதவிகளை வழங்கி வரும் எக்சிம் வங்கியின் தலைவரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் அந்த சரத் திசாநாயக்க குறிப்பிட்டார்.

இதுதவிர, தென்கொரிய வெளிவிவகார துறை அமைச்சருடனுடனும் இருதரப்பு விடயங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளார்.

No comments:

Post a Comment