Monday, August 29, 2011
தூக்கு தண்டனையை ரத்து செய்யாவிட்டால் வேலூர் சிறை முன்பு 8ம் தேதி போராட்டம்,ராமதாஸ்,திருமாவளவன்!
சென்னை : ‘‘முருகன், சாந்தன், பேரறிவாளனின் தூக்கு தண்டனையை ரத்து செய்யாவிட்டால், வரும் 8ம் தேதி வேலூர் சிறை முன்பு போராட்டம் நடத்தப்படும்’’ என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். ‘தமிழர் பாதுகாப்பு இயக்கம்’ சார்பில் மரண தண்டனை ஒழிப்பு மாநாடு மறைமலை நகரில் நேற்று மாலை நடந்தது. பாமக தலைவர் மணி தலைமை வகித்தார். மாநாட்டில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது:
முருகன், சாந்தன், பேரறிவாளன் உயிரை பாதுகாக்க 2 நாளில் முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறோம். தமிழக ஆளுநரை சந்தித்து, இந்த தூக்கு தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்த வேண்டும். தமிழக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், வரும் 6ம் தேதி தமிழ் பாதுகாப்பு இயக்கம் சார்பில் 8 திசைகளில் இருந்து வேலூரை நோக்கி பயணம் மேற்கொண்டு, 8ம் தேதி 10 லட்சம் பேர் வேலூர் சிறை முன்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு ராமதாஸ் பேசினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேசுகையில், ÔÔராஜிவ் காந்தி கொலையில் பேரறிவாளன் உட்பட 3 பேருக்கும் தொடர்பில்லை. புலிகள் மீது தடை விதிக்க வேண்டும் என முதலில் குரல் கொடுத்தவர் ஜெயலலிதா. இப்போது எந்த நோக்கத்துக்காக இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுகிறார்? எல்லாம் அழிந்து விட்ட நிலையில், அங்கு எந்த பயனும் இல்லை என்பதை தெரிந்துதான் தீர்மானம் நிறைவேற்றுகிறார்ÕÕ என்றார்.
மாநாட்டில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், பாவலர் அறிவுமதி, பாமக முன்னாள் எம்எல்ஏ மூர்த்தி, விடுதலை சிறுத்தை கட்சி செய்தி தொடர்பாளர் வன்னியரசு, தகடூர் தமிழ்செல்வன். மடிப்பாக்கம் வெற்றிச் செல்வன், மாவட்ட துணை செயலாளர் தென்னவன், பொருளாளர் இளைவளவன், பாமக மறைமலை நகராட்சி தலைவர் சசிகலா ஆறுமுகம், கவுன்சிலர் ரகுபதி உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment