Monday, August 29, 2011
புதுச்சேரியில் ராம கோபாலன் உருவ பொம்மையை எரிக்க முயன்ற 56பேரை போலீஸார் கைது செய்தனர்!
இந்து முன்னணி தலைவர் ராம கோபாலன், புதுச்சேரியில் சனிக்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற 3 பேரையும் தூக்கிலிட வேண்டும். அப்போது தான் இதுபோன்ற தவறு செய்பவர்கள் அஞ்சுவார்கள் என்று கூறினார்.
இக்கருத்தால் ராம.கோபாலனை கண்டித்து புதுச்சேரி மாணவர் கூட்டமைப்பினர், வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடத்தி சாலை மறியல் செய்ய முயன்றனர். அப்போது ராம.கோபாலன் உருவ பொம்மையையும் எரிக்க முயன்றனர். அப்போது சாலை மறியலில் ஈடுபட்ட 30 பேரை உருளையன்பேட்டை போலீஸார் கைது செய்தனர். இதில் 3 பேர் மீது உருவபொம்மை எரிக்க முயன்றதாக வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் புதுச்சேரி மாணவர் கூட்டமைப்பு நிறுவனர் சீ.சு.சாமிநாதன், தமிழர் தேசிய பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த அழகிரி, பெரியார் திராவிடர் கழக செய்தித் தொடர்பாளர் இளங்கோ, சட்டக்கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:
Post a Comment