Friday, August 26, 2011

சாந்தன், முருகன், பேரறிவாளனின் தூக்கை நிறைவேற்றுமாறு உத்தரவு அனுப்பப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்த முடியவில்லை?

Friday, August 26, 2011
ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தூக்குமர நிழலில் நிறுகும் சாந்தன், முருகன், பேரறிவாளனின் தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதற்கான உத்தரவு வேலூர் சிறைக்கு இன்று மாலை அனுப்பப்பட்டு உள்ளதாகத் தெரிகிறது. அவர்கள் மூவருமே தங்கள் மீது கருணை காட்டுமாறு இந்திய ஜனாதிபதியிடம் கோரியிருந்த நிலையில் அவர்களின் கருணை மனுக்கல் நிராகரிக்கப்பட்டன. இந்நிலையில் அவர்களின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் அவர்கள் மீதான தூக்குத் தண்டனையை நிறைவேற்றுமாறு வேலூர் மத்திய சிறைக்கு மத்திய அரசிடம் இருந்து உத்தரவு அனுப்பப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

இன்னும் ஏழு வேலை நாட்களுக்குள் அவர்கள் தூக்கிடப்படலாம் என்று சில தகவல்கள் தெரிவித்தாலும் தமிழகம் முழுக்க இந்த தூக்கிற்கு எதிராக பெரும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனத் தெரியவருகிறது. இன்னும் இவர்களைக் காப்பாற்ற நீதிமன்றத்தின் உதவியை நாட இறுதி முயர்சி எடுக்கப்படலாம் தமிழக தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை குறித்து இந்திய அரசாங்க தரப்பிலோ அல்லது சிறைச்சாலை தரப்பிலோ, நீதித்துறை மட்டத்திலோ உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்த முடியவில்லை.

No comments:

Post a Comment