Thursday, August 25, 2011

இந்தியர் மீது தாக்குதல்!

Thursday, August 25, 2011
டிக்கோயா மருத்துமனை அமைப்பில் ஈடுபட்டு வந்த இந்தியர்கள் இருவர் தாக்குதலுக்கு உள்ளாகினர்

இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது

குறித்த இந்தியர்கள் இருவரும் மற்றும் ஒருவரும் நேற்று கினிகத்தென பிரதேசத்தில் தமது வாகனத்தை நிறுத்திவிட்டு நின்றிருந்தபோது, பிரதேசவாசிகள் அவர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்

எனினும் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மாத்திரமே பரீட்சியமுள்ள குறி;த்த இந்தியர்களுக்கு பிரதேசவாசிகளின் கேள்விகளுக்கு உரிய பதிலை அளிக்கமுடியவில்லை

இந்தநிலையில் அவர்கள் கிறீஸ் பூதங்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் பிரதேசவாசிகள் தாக்குதல் நடத்தியதாக ஹட்டன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

இதன்போது காயமடைந்த இரண்டு இந்தியர்களும் டிக்கோயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

அத்துடன் டிக்கோயா மருத்துவமனையின் அமைப்பு பணிகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment