Thursday, August 25, 2011
இலங்கையில் தற்போது அமுலிலுள்ள அவசரகாலச் சட்டத்தை நீக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான பிரேரணை ஒன்றை பாராளுமன்றில் சமர்ப்பித்து விசேட உரையொன்றை ஆற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
தற்போதைய நிலையில், சாதாரண சட்டத்தின் அடிப்படையில் நிர்வாகத்தை முன்னெடுப்பதற்கான சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் இதுகுறித்து தாம் திருப்பியடைவதாகவும் இதனால் அவசரகாலச் சட்டத்தை நீக்கும் யோசனையை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இதன்போது தெரிவித்தார்.
இதேவேளை, அவசரகாலச் சட்டத்தை நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்தமை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவசரகாலச் சட்டம் நீக்க நடவடிக்கை எடுத்தமையானது நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்கான சிறந்த ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
எனினும், அவசரகாலச் சட்டம் நீக்கப்படுவதன் மூலம் மாத்திரம் ஜனநாயகத்தை உறுதி செய்ய முடியாது எனவும், அதற்காக எடுக்க வேண்டிய சட்ட திட்டங்கள் அநேகம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், நாட்டிலுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக அரசாங்கம், எதிர்க்கட்சியுடன் இணைந்து செயலாற்ற வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment