Tuesday, August 23, 2011

கிறிஸ் பேய் வாந்திகளுடன் பாதுகாப்புப் படையினருக்கு தொடர்பு கிடையாது என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்!

Tuesday, August 23, 2011
கிறிஸ் பேய் வாந்திகளுடன் பாதுகாப்புப் படையினருக்கு தொடர்பு கிடையாது என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புப் படையினரே கிறிஸ் பேய்களாக மாற்றமடைந்துள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் எதுவித உண்மையும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சட்டத்தை கையிலெடுக்க எவருக்கும் அனுமதியில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சட்டத்தை கையில் எடுப்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.

நாட்டின் பாதுகாப்பு நிலைமை குறித்து உயர் பாதுகாப்பு அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கிறிஸ் பேய் தொடர்பான சர்ச்சை ஏற்பட்ட சகல பிரதேசங்களினதும் உயர் பாதுகாப்பு அதிகாரிகள் கொழும்பிற்கு அழைக்கப்பட்டு இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

பதற்ற நிலைமைகளை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து பாதுகாப்புச் செயலாளர் ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

No comments:

Post a Comment