Tuesday, August 23, 2011

நாவாந்துறையில் ஏற்றபட்ட பதற்றமான சூழ்நிலையின் போது கைதுசெய்யப்பட்ட பொதுமக்களை எதிர்வரும் 26 ம் திகதி வரையில் விளக்கமறியில்: செய்யப்பட்டவர்களில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் 18 மாணவர்கள் இருந்ததினால் அவர்களை நீதிமன்றம் எச்சரித்து விடுவித்துள்ளது!

Tuesday, August 23, 2011
நேற்றிரவு யாழ் நாவாந்துறையில் ஏற்றபட்ட பதற்றமான சூழ்நிலையின் போது கைதுசெய்யப்பட்ட பொதுமக்களை எதிர்வரும் 26 ம் திகதி வரையில் விளக்கமறியில் வைக்குமாறு யாழ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் கைது செய்யப்பட்டவர்களில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் 18 மாணவர்கள் இருந்ததினால் அவர்களை நீதிமன்றம் எச்சரித்து விடுவித்துள்ளது.

ஏனையவர்கள் காயங்களுக்குள்ளாகி இருப்பதனால் அவர்களுக்கான சிகிச்சைகளை வழங்கவும் நீதிபதி உத்திரவிட்டுள்ளதுடன், அவர்களை தடுத்து வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை யாழப்பாணம் நாவாந்துறைப் பகுதியில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரி இன்று யாழ் நீதிமன்றத்திற்கு எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தினை புகைப்படமெடுத்தார் என்றக் குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த உதயன் பத்திரிகையின் ஊடகவியலாளர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இவர் நீதிமன்றத்திற்கு வெளியில் காயமடைந்தவர்களை அம்புலன்ஸ் வண்டியில் ஏற்றும்போது புகைப்படமெடுத்ததாகவும், இதன்போது நீதிபதியினையும் புகைப்படமெடுத்தார் என்றக் குற்றச்சாட்டில் இன்று காலை கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்திலேயே தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து கலவரத்தின் போது கைது செய்யப்பட்டவர்களின் வழக்கு விசாரiணியன் பின்னர் குறித்த ஊடகவியலாளருக்கு 500 ரூபா அபராதம் விதிக்கப்பட்டதுடன், அவர் எடுத்த புகைப்படங்கள் அழிக்கப்படவேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

நாவாந்துறை மர்ம மனிதர்கள் விவகாரம் தொடர்பில் கைதான 125 பேர் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். அரச உடமைகளுக்கு சேதம் விளைவித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் எதிர்வரும் 26ஆம் திகதி வரை இவர்களை விளக்க மறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார். இதேவேளை கைதானவர்கள் அனேகமானவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகி காயங்களுடன் காணப்பட்டதாகவும் 40 பேர் வரை வைத்தியசாலையில் அனுமதிமதிக்கப் பட்டதாகவும் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment