Sunday, August 21, 2011
ஐரோப்பா மற்றும் அவுஸ்திரேலிய நாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் குழுவொன்று நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்துள்ளது.
இலங்கை தொடர்பில் சர்வதேச ரீதியாக நிலவும் அவப்பெயரை நீங்குவதற்கு மேற்கொள்ளக் கூடிய நடவடிக்கை குறித்து இந்த சந்திப்பின் போது அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள், தமது நாட்டின் நன்மதிப்பை உயர்த்துவதற்கு முயற்சிசெய்ய வேண்டும் என ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
அண்மைக்காலமாக அவ்வாறு செயற்பட்டவர்கள் குறித்து அவர் பாராட்டும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, சர்வதேச ரீதியான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் பலம் வாய்ந்த பிரசார பொறிமுறையொன்றை உருவாக்க வேண்டும் எனவும் இந்த சந்திப்பின் போது ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment