Sunday, August 21, 2011

ஈரானில் உளவு பார்த்த அமெரிக்கர்கள் 2 பேருக்கு 8 ஆண்டு சிறை தண்டனை!

Sunday, August 21, 2011
டெஹ்ரான்: ஈரானில் உளவு பார்த்த 2 அமெரிக்கர்களுக்கு 8 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரான் - ஈராக் எல்லை பகுதியில் கடந்த 2009ம் ஆண்டு சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றித் திரிந்த 3 பேரை ராணுவ வீரர்கள் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் அமெரிக்காவை சேர்ந்த ஷேன் பவுர், ஜோஷ் பேட்டல், சாரா ஷூர்டு என்பது தெரிய வந்தது. Ôஈராக் மலைப் பகுதிகளில் வசித்ததாகவும், தவறுதலாக ஈரான் எல்லைக்குள் வந்து விட்டதாகவும் 3 பேரும் தெரிவித்தனர் அதை ராணுவ வீரர்கள் ஏற்கவில்லை.

மூன்று பேரையும் கைது செய்து, சட்டவிரோதமாக ஊடுருவ முயன்றது, உளவு பார்த்தது உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இவர்கள் மீதான வழக்கு 2 ஆண்டுகளாக நடந்து வந்தது. கடந்த 2010 செப்டம்பர் மாதம் சாரா ஷூர்டுக்கு அபராதம் விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார். ஷேன் மற்றும் ஜோஷ் மீதான வழக்கை விசாரித்த ஈரான் உயர் நீதிமன்றம் இருவருக்கும் 8 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இவர்களை விடுவிக்க அமெரிக்க அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

No comments:

Post a Comment