Sunday, August 21, 2011
சனல் 4 ஒளிபரப்பிய இரு காணொளிகள் தொடர்பான விசாரணைப் பகுதிகளும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் இணைத்துக் கொள்ளப்படும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நவம்பர் 15 ம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்விடம் சமர்ப்பிக்கப்படவுள்ள இறுதி அறிக்கையில் சனல் 4 வெளியிட்ட காணொளிகள் தொடர்பில் ஆராயப்பட்ட விடயங்கள் தொடர்பில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் லக்ஷ்மன் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என பல்தரப்பினராலும் சனல் 4 வெளியிட்ட காணொளி தொடர்பில் சுதந்திர விசாரணைக்கு வலியுறுத்தப்பட்டு வந்தது.
இலங்கை அதற்கு நல்லிணக்க ஆணைக்குழு அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் என குறிப்பிட்டிருந்தது.
ஐநா மனித உரிமை கவுன்சிலுக்கு ஆணைக்குழுவின் அறிக்கையை கால நேரத்துடன் சமர்ப்பிக்குமாறு சர்வதேசம் அழுத்தம் வழங்கியதாகவும் லக்ஷ்மன் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அறிக்கையிடல் இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment