Friday, August 26, 2011

சர்வதேச அளவில் அதிகாரம் மிக்க பெண்களில் 7வது இடத்தில் சோனியா!

Friday, August 26, 2011
வாஷிங்டன் : உலகின் அதிகாரம் மிக்க பெண்கள் பட்டியலில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி 7ம் இடத்தைப் பிடித்துள்ளார். இந்த ஆண்டின் உலக அளவில் அதிகாரம் படைத்த முதல் 100 பெண்கள் அடங்கிய பட்டியலை போர்ப்ஸ் இதழ் பட்டியலிட்டுள்ளது. இதில், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் முதலிடத்தைப் பிடித்தார்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹில்லரி கிளின்டன் 2ம் இடத்தையும், பிரேசிலின் முதல் பெண் அதிபர் தில்மா ருசுப் 3ம் இடத்தையும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும் பெப்சி நிறுவன தலைவருமான இந்திரா நூயி 4ம் இடத்தையும் பிடித்தனர். பேஸ்புக் தலைமை அதிகாரி ஷெரில் சேண்ட்பெர்க் (5), உலகின் முன்னணி பணக்காரரும் மைக்ரோசாப்ட் அதிபருமான பில்கேட்ஸ் மனைவி மெலிண்டா கேட்ஸ் (6) அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தனர்.

காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி 7ம் இடத்தில் உள்ளார். இவர் இப்போது அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார். அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா மனைவி மிச்செலி 8வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. நம் நாட்டின் 2வது பெரிய வங்கியான ஐசிஐசிஐ தலைவர் சந்தா கோச்சர் 43வது இடத்தில் உள்ளார். இவ்வங்கியின் ஸி5.42 லட்சம் கோடி சொத்தை இவர் நிர்வகித்து வருகிறார்.

அடுத்தபடியாக, நாட்டின் முதல் பயோடெக் தொழிலதிபர் கிரண் மஜும்தார்&ஷா 99வது இடத்தில் உள்ளார். இவர் தனது 25வது வயதில் (1978) பயோகான் நிறுவனத்தை தொடங்கினார். அமெரிக்க பங்குச் சந்தையில் ஸி4,600 கோடிக்கு மேல் நிதி திரட்டிய 2வது இந்திய நிறுவனம்தான் பயோகான்.

No comments:

Post a Comment