Saturday, August 27, 2011

வேலூர் ‌ம‌த்‌திய ‌சிறை‌க்கு 3 அடு‌க்கு பாதுகா‌ப்பு போட‌ப்ப‌ட்டு‌ள்ளது!

Saturday, August 27, 2011
ரா‌ஜி‌வ்கா‌ந்‌தி கொலை வழ‌க்‌கி‌ல் கைதா‌கி உ‌ள்ள முருக‌ன், பே‌ர‌றிவாள‌ன், சா‌ந்த‌ன் ஆ‌கியோரு‌க்கு வரு‌ம் 9ஆ‌ம் தே‌தி தூ‌க்கு‌த் த‌ண்டனை ‌நிறைவே‌ற்ற‌ப்பட உ‌ள்ளதா‌ல் வேலூர் ‌ம‌த்‌திய ‌சிறை‌க்கு 3 அடு‌க்கு பாதுகா‌ப்பு போட‌ப்ப‌ட்டு‌ள்ளது.

3 பேரையும் 9ஆ‌ம் தேதி தூக்கில் போட இருக்கும் தகவல் நே‌ற்‌று பரவியதும், வேலூர் சிறையை நோக்கி பலர் வந்த வண்ணம் இருந்தனர். அதைத் தொடர்ந்து ‌சிறைக்கு முன்பும், சிறை‌‌யிக்கு செல்லும் பிரதான சாலைகளிலும் துப்பாக்கி ஏந்திய காவல‌‌ர்க‌ள் குவிக்கப்பட்டனர்.

இதனால் சிறை வளாக பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டது. இத‌னிடையே வேலூ‌ர் ம‌த்‌திய ‌சிறை‌க்கு 3 அடு‌க்கு பாதுகா‌ப்பு போ‌ட‌ப்ப‌ட்டு‌ள்ளதாக ‌சிறை‌த்துறை க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர் அறிவுடைநம்பி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

No comments:

Post a Comment