Saturday, August 27, 2011

அவசரகால சட்டம் விலக்கல் - ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்பு!

Saturday, August 27, 2011
அவசரகால சட்டம் நீக்கப்பட்டமையை ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்றுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின், வெளிவிவகார நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு கொள்கைகள் தொடர்பான விஷேட பிரதிநிதி கெத்தரின் ஹெஸ்டன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இலங்கை மக்களிடையே இயல்பு வாழ்கையை முன் எடுத்து செல்வதற்கான அடித்தளமாக இந்த நடவடிக்கை விளங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், ஜனநாயக சமூகத்தினுள் பொது மற்றும் அரசியல் உரிமைகளை பெற்று கொள்வதற்கான சந்தர்ப்பத்தை வழிசமைத்து கொடுக்க வேண்டும் எனவும் ஐரோப்பிய ஒன்றியத்தின், வெளிவிவகார நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு கொள்கைகள் தொடர்பான விஷேட பிரதிநிதி கெத்தரின் ஹெஸ்டன் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் அவசர கால சட்டம் நீக்கப்பட்டமைக்கு, இந்தியா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் தமது வரவேற்பை வெளியி;ட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

No comments:

Post a Comment