Saturday, August 27, 2011

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய மத்திய,மாநில அரசுகள் முயற்சி எடுக்க வேண்டும்-கலைஞர்!

Saturday, August 27, 2011
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகிய 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய மத்திய, மாநில அரசுகள் முயற்சி எடுக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கலைஞர் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசை ஆளும் பிரதானக் கட்சியான காங்கிரஸ் கட்சியும், அதன் தலைவர் சோனியா காந்தியும் இந்தப் பிரச்சனையிலே அக்கறையோடு மூன்று உயிர்களை காப்பாற்ற முன்வர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

முடிவெடுக்க இன்னும் சில நாட்களே இருக்கின்ற நிலையில் மத்திய அரசும், தமிழக அரசும் இந்தப் பிரச்சினையிலே அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு,

இந்த மூவரின் மீதான தூக்குத் தண்டனையை ரத்து செய்திட வேண்டுமென்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment