Saturday, August 27, 2011
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தலைவர் டைரக்டர் பாரதிராஜா, சென்னையில் நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் செயற்குழுவின் அவசர கூட்டம் இன்று நடந்தது. அதில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கருணை மனு தள்ளுபடி செய்யப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று பேர்களுக்கும் மரண தண்டனை நிறைவேற்றக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மனித உயிர் அரிதானது. இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்களை படுகொலை செய்த பாவம் இன்னும் போகவில்லை. இந்த நிலையில், மூன்று தமிழர்களுக்கு தூக்குத்தண்டனை விதிப்பது மகா பாவம். ஒரு கொலைக்கு இன்னொரு கொலைதான் தீர்வு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
அது தமிழராக இருந்தாலும் சரி, ஜப்பானியராக இருந்தாலும் சரி, ஒரு கொலைக்கு இன்னொரு கொலை என்பதை ஏற்க முடியாது. இந்த 3 தமிழர்களின் உயிரையும் காப்பாற்றுவது, இனமானத்தை காப்பாற்றுவது போல் ஆகும். தமிழக முதல்&அமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் ஆகிறது.
மிக சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார். அவர் படித்தவர். அறிவாளி. தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூன்று தமிழர்களையும் காப்பாற்றுவதற்கு முதல்&அமைச்சர் ஜெயலலிதா குரல் கொடுக்க வேண்டும் என்று தமிழர்கள் அத்தனை பேரும் எதிர்பார்க்கிறார்கள். இதுதொடர்பாக, நாங்கள் முதல்- அமைச்சரை நேரில் பார்த்து மனு கொடுக்க இருக்கிறோம். பேரறிவாளன் 19 வயதில் ஜெயிலுக்குள் போனவர்.
இப்போது 40 வயதை கடந்து விட்டார். இத்தனை வருடங்கள் தண்டனையை அனுபவித்த பிறகும் அவருக்கு மரண தண்டனை கொடுப்பது, குரூரம். எனவே இந்த பிரச்சினை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி சென்னை கோர்ட்டுக்கு வந்து வாதாடும்போது, தமிழ் இன உணர்வாளர்கள் அத்தனை பேரும் கோர்ட்டு முன்பு ஒன்று கூடுவோம்.
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று பேர்களின் உயிர்களை காப்பாற்றக்கோரி, கல்லூரி மாணவர்களை திரட்டி போராட்டம் நடத்தவும் முடிவு செய்து இருக்கிறோம். எந்த மாதிரியான போராட்டம் என்பதை பின்னர் அறிவிப்போம். இவ்வாறு பாரதிராஜா கூறினார்.
பேட்டியின்போது தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் துணைத்தலைவர் டைரக்டர் சேரன், பொருளாளர் ஜனநாதன், இணைச்செயலாளர்கள் வேல்முருகன், எஸ்.எஸ்.ஸ்டான்லி ஆகியோர் உடன் இருந்தார்கள்.

No comments:
Post a Comment