Saturday, August 27, 2011

அவசர கால சட்ட நீக்கத்திற்கு இந்தியா வரவேற்பு:ஜெயலலிதாவிற்கும் சுஸ்மா சுவராஜிக்கும் இலங்கையில் இருந்து அழைப்புகள் வந்துள்ளதாக-கிருஷ்ணா தெரிவித்துள்ளார்

Saturday, August 27, 2011
அவசரகால சட்டம் நீக்கப்பட்டமையை இந்தியா வரவேற்றுள்ளது.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா இதனை தெரிவித்துள்ளார்.

இந்திய நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் இடம் பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, வட மாகாண மக்களின் மறுவாழ்வுக்காக இந்தியா தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் அவசர கால சட்டம் நீக்கப்பட்டமைக்கு, அமெரிக்கா, ஐரோப்பா ஒன்றியம், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் தமது வரவேற்பை வெளியி;ட்டுள்ளன.

ஜெயலலிதாவிற்கும் சுஸ்மா சுவராஜிக்கும் இலங்கையில் இருந்து அழைப்புகள் வந்துள்ளதாக-கிருஷ்ணா தெரிவித்துள்ளார்!
தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவிற்கும் இந்திய பாராளுமன்ற மானிலங்களவை எதிர்கட்சித் தலைவர் சுபா சுஸ்மா சுவராஜிக்கும் இலங்கையில் இருந்து அழைப்புகள் வந்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் சமல் ராஜபக்ஷ் சுஸ்மா சுவராஜிக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் அந்த அழைப்பை ஏற்று சுஸ்மா எதிர்வரும் 16ம் திகதி தொடக்கம் 20ம் திகதிவரை இலங்கை விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சென்னையில் சந்தித்த இலங்கை தூதுவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் விடுத்த அழைப்பை ஜெயலலிதாவுக்கு அறிவித்துள்ளார்.

மேலும் தமிழ்நாட்டு பிரதிநிதிகள் மாத்திரமன்றி இந்திய பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர் குழுவிற்கும் இலங்கை அழைப்பு விடுத்துள்ளதாக கிருஷ்ணா கூறியுள்ளார்.

இலங்கையில் யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் அங்குள்ள தமிழ் மக்களின் மீள்வாழ்வு திட்டத்தில் இந்தியா அதிக அக்கரை செலுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment