Monday, August 22, 2011
கடந்த மே 2-ந்தேதி பாகிஸ்தானில் அபோதாபாத்தில் பதுங்கியிருந்த அல்கொய்தா தீவிரவாதிகளின் தலைவர் பின்லேடன் அமெரிக்க படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதற்கு பழி வாங்கும் நடவடிக்கையாக ஈராக்கில் தாக்குதல் நடத்துவோம் என அல்கொய்தா தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
இஸ்லாமிக் வெப்சைட்டில் அல்கொய்தா இயக்கம் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-
பின்லேடன் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈராக்கில் 100 இடங்களில் தாக்குதல் நடத்துவோம். அவை தற்கொலை தாக்குதல்களாகவும், ரோட்டோர குண்டு வெடிப்பாகவும், துப்பாக்கி சூடு போன்றவையாகவும் இருக்கலாம். அவை தவிர சத்தமில்லாமல் மிக அமைதியான முறையில் ஆயுத தாக்குதல்களும் நடத்தப்படலாம்.
இது ஈராக்கின் அனைத்து நகரங்கள் மற்றும் கிராமங்களிலும் நடைபெறும். நோன்பு மேற்கொள்ளும் புனித ரமலான் மாதத்தின் நடுவில் அதாவது ஆகஸ்டு மாதத்தில் இந்த தாக்குதல்கள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்டு 15-ந்தேதி ஈராக்கில் 7 மாகாணங்களில் தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. அதில் 70 பேர் உயிரிழந்தனர். 260 பேர் காயம் அடைந்தனர். இச்சம்பவத்தை அல் கொய்தா இயக்கம் நடத்தியதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அல்கொய்தா தீவிரவாதிகளின் மிரட்டல் ஈராக் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இந்த ஆண்டு இறுதிக்குள் அமெரிக்க படை வாபஸ் பெறப்பட உள்ளது. எனவே, இந்த தாக்குதல்களை ஈராக் ராணுவம் சமாளிக்குமா? என கேள்வி எழுந்துள்ளது.

No comments:
Post a Comment