Saturday, July 16, 2011

பயங்கரவாதத்திற்கு எதிரான கூட்டு நடவடிக்கைக்கு முன்வருமாறு இலங்கை அரசாங்கம் இந்தியாவுக்கு அழைப்பு விடுத்துள்ளது!

Saturday, July 16, 2011
பயங்கரவாதத்திற்கு எதிரான கூட்டு நடவடிக்கைக்கு முன்வருமாறு இலங்கை அரசாங்கம் இந்தியாவுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இந்தியாவின் வர்தக தலைநகரான மும்பையில் அண்மையில் இடம்பெற்ற தீவிவராத தாக்குதலை தொடர்ந்து இலங்கை ஜனாதிபதி மகிந்த ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ நேற்று அறிக்கை ஒன்றை விடுத்துள்ளர்.

அந்த அறிக்கையில் தெற்காசிய பிராந்தியத்தில் இடம்பெறும் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு இனி இடமளிக்க கூடாது என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் கடந்த 30 வருடங்காலமாக இடம்பெற்று வந்த துன்பகரமான போர் கடந்த 2009 ஆம் ஆண்டு நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது.

இந்த நிலையில் பயங்கரவாத்தை மீண்டும் எந்தவிதத்திலும் தலைத்தூக்க அனுமதிக்க கூடாது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கும், பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டவும்;, இந்தியா மேற்கொள்ளும் சகல முயற்சிகளுக்கும் இலங்கை மக்கள ஆதரவளிப்பார்கள் எனவும் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment