Saturday, July 16, 2011

புலிகளுடனான யுத்தத்தின்போது காங்கேசன்துறை துறைமுகத்தில் தாக்கியழிக்கப்பட்ட கடற்கலங்களின் சிதைவுகளை அகற்றும் பணிகள் ஆரம்பமாகியுள்ளது!

Saturday, July 16, 2011
புலிகளுடனான யுத்தத்தின்போது காங்கேசன்துறை துறைமுகத்தில் தாக்கியழிக்கப்பட்ட கடற்கலங்களின் சிதைவுகளை அகற்றும் பணிகள் ஆரம்பமாகியுள்ளது!

புலிகளுடனான யுத்தத்தின்போது காங்கேசன்துறை துறைமுகத்தில் தாக்கியழிக்கப்பட்ட கடற்கலங்களின் சிதைவுகளை அகற்றும் பணிகள் ஆரம்பமாகியுள்ளதாக துறைமுகம் மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சு தெரிவித்தது.இந்த சிதைவுகள் அகற்றப்பட்டபின் காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி வேலைகள் அடுத்த மாதம் தொடங்கும் என அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன. ஆறு கப்பல்களின் சிதைவுகளை அகற்றும் வேலை ஒரு இந்திய கம்பனியிடம் கொடுக்கப்பட்டுள்ளது அவ்வட்டாரங்கள் கூறின.

இந்த கப்பல் சிதைவுகள் அகற்றப்பட்ட பின்னர் அவை ஏலத்தில் விடப்படும் என அமைச்சின் அதிகாரியொருவர் கூறினார். துறைமுக புனரமைப்பு பூர்த்தியடைந்தபின் வடக்குக்கான பொருட்களை குறைந்த செலவில் கப்பல் மூலம் அனுப்பக்கூடியதாக இருக்கும் என அந்த அதிகாரி கூறினார்.

No comments:

Post a Comment