Saturday, July 16, 2011

சனல் 4 காணொளி தொகுப்பானது ஏகாதிபத்திய நாடுகளின் சதி - அமைச்சர் விநாயகமூர்த்தி!

Saturday, July 16, 2011
சனல் 4 காணொளி தொகுப்பானது, இலங்கையின் அபிவிருத்தியை சகித்துக்கொள்ள முடியாத சிலரின் சூழ்ச்சியாகும் என பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிடுகின்றார்.

யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் நாட்டில் வட பகுதியில் அபிவிருத்திகள் இடம்பெறுகின்ற நிலையில் இடம்பெற்று வருவதுடன், மக்கள் மகிழ்வுடன் வாழ்ந்து வருவதாகவும் அவர் நியுஸ் பெஸ்டுக்கு கருத்து தெரிவித்தார்.

யுத்தம் முடிவடைந்து அமைதியான சூழல் உருவாகின்ற நிலையில் சில தீய சக்திகள் இங்கே பிரச்சினைகளை உருவாக்க முற்படுகின்றனர் இவை திட்டமிட்ட சதிகளாகவே இருக்கின்றது இந்த திட்டங்களுக்கு ஏகாதிபத்திய நாடுகளும் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் கூறினார்.

தற்போதைய நிலையில் மக்கள் சமாதானமாக வாழ்வதையே விரும்புகிறார்கள் அவர்களுடைய வாழ்க்கைத்தரம் உயர்வடைந்து பொருளாதாரத்தில் அபிவிருத்தியை கண்டு வருகின்ற இந்த நிலையில் தீயசக்திகள் செயற்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

சனல் 4 ஒளிப்பரப்பிக் கொண்டிருக்கும் காணொளிக் காட்சிகளைப் போன்று இலங்கை அரசாங்கமும் நினைத்தால் அதைவிட பயங்கரமான காட்சிகளை கொண்ட காணொளிகளை வெளியிட முடியும் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல்களையும் படுகொலைகளையும் தொகுத்து வெளியிடமுடியும் ஆனால் இலங்கை அரசாங்கம் அவ்வாறு செய்து சிங்கள மக்களின் உணர்வுகளை தூண்டுவதற்கு முயற்சிளை மேற்கொள்ளவில்லை இந்த நாட்டில் சமாதானத்தை நிலைநாட்டுவதே அரசாங்கத்தின் முக்கிய நோக்கம் எனறும் மீள் குடியேற்ற பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment