Tuesday, July 19, 2011

யாழ்ப்பாணத்திலும், கிளிநொச்சியிலும் மனித உரிமை ஆணைக்குழு கண்காணிப்பு நடத்தவுள்ளது!

Tuesday, July 19, 2011
யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் மனித உரிமை ஆணைக்குழு கண்காணிப்பு நடாத்தத் திட்டமிட்டுள்ளது. எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களின் போது இரண்டு குழுக்கள் கண்காணிப்பு பணிகளுக்காக கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக பல எதிர்க்கட்சிகள் முறைப்பாடு செய்துள்ளதாக மனித உரிமை ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. இந்த முறைப்பாடுகளை கவனத்திற் கொண்டு கண்காணிப்பாளர்களை கடமையில் ஈடுபடுத்தத் தீர்மானித்ததாக மனித உரிமை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

தேர்தல்களை பிரச்சார நோக்கில் அரசாங்கம் வடக்கில் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வடக்கு தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளை அனுப்பி வைக்குமாறு மனித உரிமை ஆணைக்குழுவிடம், பெபரல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது

No comments:

Post a Comment