Tuesday, July 19, 2011

சகல இலங்கையர்களினதும் மனித உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன-ஜாலிய விக்ரமசூரிய!

Tuesday, July 19, 2011
நாட்ன் சகல மக்களினதும் மனித உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டுளு;ளதாக அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.
எந்தவொரு இன சமூகத்திற்கும் பக்கச்சார்பான முறையில் மனித உரிமைச் சட்டங்கள் அமுல்படுத்தப்படவில்லை என்பதனை அமெரிகா புரிந்துகொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் மனித உரிமை கோட்பாடுகள் நடைமுறையில் அமுல்படுத்தப்படுவதாகவும் மேற்குலக நாடுகளில் அவை வெறும் எழுத்து மூலமான ஆவணமாக பேணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சில மேற்கு ஊடகங்களும் மனித உரிமை அமைப்புக்களும் இலங்கை தொடர்பில் பிழையான கருத்துக்களை தொடர்ந்தும் வெளியிட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இலங்கையில் மக்கள் அச்சமின்றி வாழ்ந்து வருவதாகவும் அதற்கான பின்னணியை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment