Tuesday, July 19, 2011சமீபகாலத்தில் பயங்கரவாதத்தை முற்றாக தோல்வியடையச் செய்த ஒரே ஜனநாயக நாடு என்ற பெருமை இலங்கைக்கு கிடைத் திருக்கிறது. உலகின் மிகக் கொடிய பயங்கரவாத இயக்கமான எல்.ரி.ரி.ஈயை தோல்வியடையச் செய்த யுத்தத்தின் இறுதி நாட்களில் மனித உரிமை மீறல்களை எங்கள் நாட்டின் ஆயுதப் படையினர் மேற்கொண்டார்கள் என்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை இன்று இலங்கைக்கு எதிரான சில சர்வதேச அமைப்புக்கள் சுமத்தி, நம்நாட்டின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.
மேற்கு நாடுகளில் தொடர்ந்தும் உல்லாச வாழ்க்கையை மேற்கொள்ளும் நோக்கத்துடன் சுயநல போக்கில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக பிரசாரங்களை மேற்கொண்டு வரும், இங்கிருந்து புலம் பெயர்ந்து விரல்விட்டு எண்ணக்கூடிய சில தமிழர்களும் மேற்கொண்டு வருவ தும் வேதனை அளிக்கிறது. எமது நாட்டிற்கு அவப்பெயரை ஏற் படுத்தி வருவது வேதனையை அளிக்கிறது.
இத்தனை சர்வதேச அழுத்தங்கள் இருந்தாலும், உலகின் பலம்வாய்ந்த ஒரு ஜனநாயக நாடான அமெரிக்காவின் பாராளுமன்றமான காங் கிரஸ் என்று அழைக்கப்படும் அமைப்பின் வடகரோலினா பிர தேசத்தின் அங்கத்தவர் ஈத் சூளர், சமீபகாலத்தில் பயங்கரவாதத்தை படுதோல்வி அடையச் செய்த ஒரேயொரு ஜனநாயக நாடு இலங்கை என்று பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
இந்த அமெரிக்க அரசியல்வாதி இலங்கையில் பயங்கரவாத யுத்தம் முடிவுற்ற பின்னர், 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் இங்கு வந்து நிலைமையை நேரில் பார்த்திருக்கிறார். யுத்தம் முடிவு பெற்ற பின் னர் இலங்கையில் பயங்கரவாதிகளின் ஒரு தாக்குதல் கூட நடை பெறவில்லை என்பதை தாம் தனது நேரடி ஆய்வின் மூலம் புரிந்து கொண்டிருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
பயங்கரவாத யுத்தத்தினால் இடம்பெயர்ந்த சுமார் 3 இலட்சம் பேரில் அநேகமாக, அனைவருமே இன்று தமது சொந்த ஊர்களுக்கும், இருப்பிடங்களுக்கும் திரும்பியிருக்கிறார்கள் என்றும் தெரிவித்த அவர், 11 ஆயிரம் எல்.ரி.ரி.ஈயின் முன்னாள் போராளிகளும், ஆயுதம் தூக்கிய சிறுவர் போராளிகளும் இன்று புனர்வாழ்வு பெற்று படிப்படியாக ஜனநாயக நீரோட்டத்தில் சங்கமித்து மீண்டும் தங்கள் சாதாரண வாழ்க்கையை சமூகத்தில் அமைத்துக் கொள்வதற்கு வழி வகுத்திருப்பது குறித்தும் இந்த அமெரிக்க அரசியல்வாதி பாராட்டு தெரிவித்து இருக்கிறார்.
மக்களின் சகஜ வாழ்க்கைக்கு பெரும் முட்டுக்கட்டையாக இருக்கும் தரைக்கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் இன்று இலங்கை அரசாங்கம் சர்வதேச அமைப்புக்கள் மற்றும் நாடுகளின் உதவி யுடன் தீவரமாக ஈடுபட்டு வருகிறது என்றும், யுத்த கருமேகம் வட பகுதியின் மீது நிலைகொண்டிருந்த காலகட்டத்தில் புதைக்கப் பட்ட 20 இலட்சம் தரைக்கண்ணி வெடிகளில் தற்போது சுமார் 60 வீதமானவை அகற்றப்பட்டிருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியா, பாகிஸ்தான், சீனா, ரஷ்யா உட்பட பல சர்வதேச நாடுகள் பயங்கரவாதத்தை ஒழித்து இலங்கை ஏற்படுத்திய சாதனையை முழுமனதாக பாராட்டி, இலங்கைக்கு எதிராக அனாவசியமாக ஆதாரமற்ற போலிக் குற்றச்சாட்டுக்களையும், அழுத்தங்களையும் சர்வதேச ரீதியில் கொண்டு வருவது நல்லதல்ல என்ற கருத்தை வலியுறுத்தி வருகின்றன.
இலங்கையின் மிக அருகிலுள்ள அயல்நாடான இந்தியாவும், இந்த விடயத்தில் இலங்கைக்கு ஆதரவளிக்கும் கொள்கையை கடைப் பிடித்து வருகிறது. சமீபத்தில் புதுடில்லியில் எங்கள் நாட்டின் பத் திரிகை ஆசிரியர்களை சந்தித்து, மனம்விட்டு பேசிய இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் திருமதி. நிருபமா ராவ், இலங்கையில் யுத்தத்தின் இறுதி நாட்களில் மனித உரிமை மீறல்கள் மேற்கொள்ளப்பட்டன என்ற தருஸ்மன் அறிக்கை உட்பட பல தரப்பட்ட சர்வதேச ரீதியிலான குற்றச்சாட்டுக்களை இந்தியா பொருட்படுத்தவில்லை என்று திட்டவட்டமாக அறிவித்திருந்தார்.
சர்வதேச அழுத்தங்கள் இருக்கின்ற காரணத்தினால், இலங்கை அர சாங்கம் தான் குற்றமிழைக்கவில்லை என்பதை உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டுவது நல்லது என்று யோசனை தெரிவித்த திருமதி.
நிருபமா ராவ், இலங்கை அரசாங்கம் பல்லாண்டுகால பயங்கரவாத யுத்தத்திற்கு அடிதளமாக அமைந்திருக்கும் நாட்டின் இனப்பிரச்சி னைக்கு பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களையும், அபிலாஷைகளையும் பூர்த்தி செய்யக் கூடிய வகையில் இலங்கை யிலுள்ள சகல இனங்களைச் சேர்ந்த மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதில் இந்தியா விருப்பம் கொண்டுள்ளது என்று கூறினார்.
இது தான் யதார்த்தம், கடந்த கால மனதை வேதனைப்படுத்தும் நிகழ் வுகளை மறந்து, இந்நாட்டு மக்கள் அனைவரும் மீண்டும் ஐக்கிய மாகவும், புரிந்துணர்வுடனும் நல்லிணக்கப்பாட்டுடனும் ஒன்றுபட்டு, நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் பங்குதாரர்களாக மாறவேண்டும் என்பதில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் அரசாங்கம் அதிக ஆர்வத்துடன் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.
தற்போது, நாட்டின் பல பகுதிகளில் இம்மாதம் 23ம் திகதியன்று நடை பெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தல்களுக்கான அரசியல் கட்சி களுக்கான பிரசார பணிகள் சூடு பிடித்திருக்கின்றது.
வட பகுதியில் நடந்த ஒரு அரசியல் கூட்டத்தில் உரை நிகழ்த்திய பொருளாதார அபிவிருத்தித்துறை அமைச்சர் பசில் ராஜபக்ஷ, வெளிநாடுகளி லுள்ள இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்த தமிழர்கள் மீண்டும் நாடு திரும்பி, இலங்கையின் பொருளாதார மேம்பாட்டிற்காக பல் வேறு துறைகளுக்கு முதலீடு செய்ய வேண்டும் என்ற ஒரு உன் னத வேண்டுகோளையும் விடுத்திருப்பது, அரசாங்கம் இனப்பிரச்சினை க்கு கூடிய விரைவில் நிரந்தர அரசியல் தீர்வொன்றை ஏற்படுத்து வதில் அதிகம் விருப்பம் கொண்டிருக்கிறது என்பதற்கு சான்றுபகர்கிறது.
தேர்தல்கள் முடிவடைந்த பின்னர், அரசியல்கட்சிகள் அனைத்தும் உண்மை நிலையை உணர்ந்து நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் நிரந்தர சமாதானத்திற்காகவும் உழைக்க முன்வருவது வரவேற்கத் தக்கதாகும்.
No comments:
Post a Comment