Tuesday, July 19, 2011

மீனவர் பிரச்சினை: இலங்கை அரசுடன் பேசி வருகிறோம்-நிருபமா ராவ்!

Tuesday, July 19, 2011
டெல்லியில், மீன்வளம் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. அதில், மத்திய வெளியுறவு செயலாளர் நிருபமா ராவ் கலந்து கொண்டார். அவர் பேசுகையில்,

மீனவர்கள் பிரச்சினையில் மத்திய அரசு விசேஷ கவனம் செலுத்தி வருகிறது. இந்திய இலங்கை மீனவர்கள் அமைதியாக வாழ வழி செய்வதற்காக, இலங்கை அரசுடன் பல்வேறு மட்டங்களில் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

நான் இலங்கை சென்றிருந்தபோது, மீனவர் பிரச்சினையை எழுப்பினேன். அப்போது, இந்திய மீனவர்களின் நலன்கள் மீது விசேஷ அக்கறை செலுத்துவதாகவும், எந்த சூழ்நிலையிலும் துப்பாக்கி சூடு நடத்த மாட்டோம் என்றும் இலங்கை அரசு உறுதி அளித்தது என்றார்.

No comments:

Post a Comment