Tuesday, July 19, 201165 உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் கண்காணிப்பு மற்றும் இணைப்பு நடவடிக்கைகளுக்காக விசேட தேர்தல் அதி;காரிகள் 600 பேர் கொழும்பிலிருந்து அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் எதிர்வரும் 21 ம் மற்றும் 22 ம் திகதிகளில் தேர்தல் இடம்பெறும் பிரதேசங்களில் பணியில் ஈடுபடவுள்ளனர்.
தேர்தல் வாக்களிப்பு மற்றும் வாக்கெண்;ணும் மத்திய நிலையங்களில் இணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உதவித் தேர்தல் ஆணையாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
இதேவேளை, தெரிவுசெய்யப்பட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் கண்காணிப்பு பணிகளில் செயற்படவுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், உள்ளுராட்சி சபைத் தேர்தல்களின் போது தேர்தல் செயலகம் ஏதேனும், பிழைகளை இழைக்கும் பட்சத்தில், அது உறுதி செய்யப்படுமானால் தாம் பதவி விலகுவதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய உறுதியளித்துள்ளார்.
No comments:
Post a Comment