Tuesday, July 19, 2011

துப்பாக்கிகளை பயன்படுத்தி வன்முறைகளில் ஈடுபட்ட சம்பவங்கள் அதிகரிப்பு!

Tuesday, July 19, 2011
இரத்தினபுரி மற்றும் அம்பிலிப்பிட்டி ஆகிய பகுதிகளில் துப்பாக்கிகளை பயன்படுத்தி வன்முறைகளில் ஈடுபட்ட பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

பிரசார நடவடிக்கைகள் முற்றுப்பெறும் தருணத்தில் இவ்வாறான நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக சுதந்திரமானதும், நீதியுமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்தார்.

தேர்தல் சட்டங்களை மீறிய 93 சம்பவங்கள் இதுவரை பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், ஒரே கட்சியின் உறுப்பினர்களுக்கு இடையே இடம்பெற்ற மோதல் சம்பவங்களின் எண்ணிக்கையும், அதிகரித்துள்ளதாக கீர்த்தி தென்னக்கோன் கூறினார்.

காலி மாவட்டத்திலேயே மிகவும் மோசமான பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, தேர்தல் சட்டங்களை மீறிய சில சம்பவங்கள் தமக்குப் பதிவாகியுள்ளதாக தேசிய தேர்தல் கண்காணிப்பு நிலையத்தின் தேசிய இணைப்பதிகாரி சட்டத்திரணி ரசாங்க ஹரிஸ்சந்திர குறிப்பிட்டார்.

ஆயுதங்களைப் பயன்படுத்தி அதிக வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன், இந்தச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் சட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் ரசாங்க ஹரிஸ்சந்திர சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment