Tuesday, July 19, 2011ஐக்கிய அரபு இராச்சியத்திற்குச் சொந்தமான கப்பலொன்று சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ளது.
இந்தக் கப்பலில் இலங்கையர் ஒருவர் இருப்பதாகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
எம்.வி ஜூபா டுவென்டி" என்ற இந்தக் கப்பல், இந்து சமுத்திரத்தின் வட பகுதியில் வைத்து கடத்தப்பட்டதாக ஐரோப்பிய சங்கத்தின் கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எரிபொருட்களை ஏற்றிச்சென்ற குறித்த கப்பல் கடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் அதில் 16 உறுப்பினர்கள் இருந்துள்ளனர்.
இவர்களில் இலங்கையர் ஒருவரும், இந்தியா, பங்களாதேஷ், சூடான், மியன்மார், கென்யா மற்றும் சோமாலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment