Tuesday, July 19, 2011

சுன்னாகத்தில் தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டத்தில் ஒலிபெருக்கியை நிறுத்திய பொலிஸார்!

Tuesday, July 19, 2011
தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று சுன்னாகத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது இரவு 10 மணியளவில் அங்கு வந்த பொலிஸார் ஒலிபெருக்கிகளை நிறுத்தினர்.

வலி. தெற்கு பிரதேச சபைக்கான வேட்பாளர்களை ஆதரித்து சுன்னாகம் கதிரமலைச் சிவன் கோவிலை அண்மித்த பகுதியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தின்போதே பொலிஸார் இவ்வாறு நடந்துகொண்டனர்.

பிரசாரக் கூட்டம் இலங்கை தமிழரசுக்கட்சியின் மானிப்பாய் தொகுதியின் செயலாளர் பா.கஜதீபன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ் தேசியக்(புலி) கூட்டமைப்பு எம்.பி.க்களான பொன்.செல்வராசா, யோகேஸ்வரன், சிவசக்தி ஆனந்தன், வினோ நோகராதலிங்கம், மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், எஸ். சிறிதரன், ஈ.சரவணபவன், தமிழர் விடுதலைக்கூட்டணித் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன், ஆகியோருடன் கட்சி முக்கியஸ்தர்கள், மாநகர சபை எதிர்க்கட்சி உறுப்பினர்கள், வவுனியா மற்றும் மன்னார் பிரதேச உறுப்பினர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர்.

மாலை 5.30க்கு ஆரம்பமாகி இரவு 10.15 மணிவரை கூட்டம் இடம்பெற்றது. சுன்னாகம் நகர்ப்பகுதியில் கட்டப்பட்டிருந்த ஒலிபெருக்கியை உடன் அகற்றுமாறு கூறியதுடன் 10 மணி தாண்டி 5 நிமிடங்கள் கூட ஆவதற்கிடையில் கூட்ட மேடைக்கு வந்த பொலிஸார் ஒலிபெருக்கியை நிறுத்துமாறு உத்தரவிட்டதுடன் அதனை நிறுத்தினர்.

இதன்போது சரவணபவன் எம்.பி. உரையாற்றி முடிந்து தமிழர் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி உரையாற்றிக்கொண்டிருந்தார். எனினும் ஒலிபெருக்கி நிறுத்தப்பட்ட பின்னரும் அவர் 5 நிமிடங்கள் தனது உரையை தொடர்ந்தார்.

No comments:

Post a Comment