Tuesday, July 19, 2011

லிபியாவின் பிரேகா நகரை கைபற்றினர் கிளர்ச்சியாளர்கள்!.

Tuesday, July 19, 2011
லிபியாவின் கிழக்கு நகரான பிரேகாவை கைப்பற்றியுள்ளதாக கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். பிரேகா நகரை தங்கள் வசம் கொண்டுவந்தபோதிலும் அந்நகர வீதிகளில் கண்ணிவெடிகள் நிறைந்து காணப்படுவதால் முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாமல் உள்ளதாக கிளர்ச்சியாளர்களின் பேச்சாளர் ஷமிஸ்தீன் அப்துல்மோலா தெரிவித்துள்ளார். கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்க முடியாத லிபிய அரச படைகள் தற்போது ராஸ் லானப் நகரை நோக்கிப் பின்வாங்கி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எண்ணெய் வளம்மிக்க பிரேகா நகரின் வீழ்ச்சியானது கடாபி அரசாங்கத்திற்கு மிகப்பெரிய வீழ்ச்சி என்றபோதிலும் அந்நாட்டு அரசாங்கம் எத்தகைய செய்தியையும் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடதக்கது.

No comments:

Post a Comment