Tuesday, July 19, 2011அம்பாறை மாவட்டத்தில் உள்ள திருக்கோவில் பிரதேசத்தில் தமிழ் தேசிய (புலி)கூட்டமைப்பின் தேர்தல் துண்டுப்பிரசுரம் ஒட்டிய வேட்பாளர் ஒருவர் உட்பட நான்கு பேரை நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு கைது செய்துள்ளதாக திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமிந்த ஜெயசூரிய தெரிவித்தார்.
சம்பவதினம் நள்ளிரவு 12.15 மணியளவில் திருக்கோவில் பிரதான நகர் பகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் திருக்கோவில் பிரதேச சபைக்கான வேட்பாளர் பேரம்பலம் விஜயராஜா (வீரா) என்றழைக்கப்படும் 6 ம் நம்பர் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்த துண்டுப் பிரசுரம் ஒட்டும் போது வேட்பாளர் மற்றும் அவரின் ஆதரவாளர் உட்பட 4 பேரை கைதுசெய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களை நீதி மன்றத்தில் ஆஜயர் படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment