Tuesday, July 19, 2011

கோப்பாய் நாவலர் மஹா வித்தியாலயத்தில் இடம்பெற்ற பிரச்சார ஊரையின் போது இனவாத அரசியலும் குறுகிய அரசியலும் வேண்டாம்-ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்!

Tuesday, July 19, 2011
இனவாத அரசியலும் குறுகிய அரசியலும் வேண்டாம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார்.

கோப்பாய் நாவலர் மஹா வித்தியாலயத்தில் இடம்பெற்ற அரசியல் பிரச்சார ஊரையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் உரையாற்றுகையில் : -

நாட்டு மக்கள் அனைவரும் என் பார்வையில் ஒன்றே 13 திருத்தச்சட்டத்தினை கோருபவர்கள் ஒரு பக்கம் இன்னும் சிலர் பல தீர்வு திட்டங்களுடன் ஒரு பக்கம் இவற்றில் சிறந்ததை முன்னெடுக்க வழிவகுப்போம் என்றார்.

இந்நிகழ்வில் பிரதமர் டி.எம்.ஜயரட்னவும் பிரபா கணேஷனும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது சுமார் 9 நிமிடங்கள் ஜனாதிபதி தமிழில் உரையாற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.

நிகழ்வில் பிரதமர் டி.எம். ஜயரட்ன உரையாற்றும் போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் பணிப்புரைக்கமைய வடபகுதி யுத்தத்தால் சேதமடைந்த அனைத்து வணக்கஸ்தலங்களையும் புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள அதேவேளை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்.

30 ஆண்டுகளுக்கு பின்னர் இப்பேற்பட்ட கூட்டங்களில் சுதந்திரமாக மக்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

அத்துடன் நாட்டின் ஏனைய மாகாணங்களை விட வடமாகாணத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்நிதியினை கொண்டுதான் மீள்குடியேற்றம் உள்ளிட்ட அந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரத் தேவைகளும் நிறைவு செய்யப்படுகின்றன என்றும் சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment