Tuesday, July 19, 2011

தீவிரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு அமெரிக்கா துணை நிற்கும்: ஹிலாரி கிளிண்டன் உறுதி!

Tuesday, July 19, 2011
அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஹிலாரி கிளிண்டன் 3 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்து உள்ளார். இன்று காலை டெல்லி ஐதராபாத் இல்லத்தில் ஹிலாரி கிளிண்டனுடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா பேச்சு வார்த்தை தொடங்கினார்.

இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவை மேம்படுத்துதல், பிராந்திய அளவிலான பிரச்சினைகள், சர்வதேச விவகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

பேச்சுவார்த்தையின் போது ஹிலாரி கிளிண்டன், தீவிரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவிற்கு உறுதுணையாக அமெரிக்கா எப்போதும் இருக்கும் என்றார். மேலும் உள்நாட்டு பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதும் அவசியம் வாய்ந்தது என்றும் கூறினார்

No comments:

Post a Comment